நெல்லையில் 300 அடியில் சுவர் ஓவியம் - பள்ளி மாணவர்கள் அசத்தல்

நெல்லையில் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் 300 அடிக்கு சுவர் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளனர்.

Update: 2020-01-27 10:58 GMT
நெல்லையில் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் 300 அடிக்கு சுவர் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளனர். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் சுவர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, மைதான சுவரில் சுமார் 300 அடி நீளத்திற்கு ஓவியங்களை வரைந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்முடன் கண்டுகளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்