சீட்டுப் பணத்தைத் தர மறுத்ததால் தீக்குளிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சி

நெல்லையில் சீட்டு பணத்தை தர மறுத்ததால் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி ​​உயரிழந்தார்.
சீட்டுப் பணத்தைத் தர மறுத்ததால் தீக்குளிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சி
Published on

அம்பாசமுத்திரம் அடுத்த சிவந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பால சுப்ரமணியன். தச்சு தொழிலாளியான இவர் கஸ்பா பகுதியை சேர்ந்த மரிய செல்வம் என்பவரிம் ஒரு லட்சம் ரூபாய்க்கான சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில், சீட்டு பணத்தை கட்டி முடிக்கவே அவர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை அளிக்காமல் மரிய செல்வம் தொடர்ந்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணியன், மரிய செல்வத்தின் வீட்டின் முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி, பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மரிய செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீக்குளிப்பதை மரிய செல்வம் நேரில் கண்ட போதும், எந்த பதட்டமும் இன்றி, தனது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதிலேயே கவனமாக இருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com