கல்லிடைகுறிச்சியில் கன்றுக்குட்டி ஒன்று கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கி என்பவரின் மாட்டு கொட்டகையில் கன்றுக்குட்டி ஒன்றுக்கு உடலில் ஆங்காங்கே சிறு காயங்கள் இருந்துள்ளது. மேலும், சிறிது தூரத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில் கன்றுக்குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சிறுத்தை கால் தடத்தை பார்த்ததாக சிலர் கூறியதால், வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
