குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த நபர் தலைமறைவு - செல்போனையும் அணைத்து வைத்ததால் பரபரப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நபர், தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-09 07:42 GMT
சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4  தேர்வில், சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த திருவராஜு என்பவர்  மாநில அளவில் முதலிடம் பிடித்தார். 46 வயதான திருவராஜு-க்கு, விஜயா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கிராமத்தில் கால்நடை வளர்த்துக்கொண்டே, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், அருகாமையில் உள்ள இளையான்குடி மற்றும் சிவகங்கை நகரத்தை விடுத்து, ராமேஸ்வரத்திற்கு சென்று குரூப் 4 தேர்வு எழுதிய திருவராஜு, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அன்று முதல் அவர் வீட்டிற்கு வராத நிலையில், திருவராஜுவின் தாயார் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, தேர்வில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த அவர், தனது செல்போனையும் அணைத்து வைத்துள்ளார். இதனால் பலமணி நேரம் காத்திருந்தும் அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் இருந்து, 46 வயதில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றதுடன், மாநில அளவில் திருவராஜு முதலிடம் பிடித்தது கிராமத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது. மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் ராமேஸ்வரத்தை தேர்வு செய்து அவர் எழுதி இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்