இமைக்கும் நொடியில் இறங்கிய ஏவுகணைகள்... ஒரேநாளில் உக்ரைனை கதறவிட்ட ரஷ்யா

Update: 2024-05-05 02:48 GMT

இமைக்கும் நொடியில் இறங்கிய ஏவுகணைகள்... ஒரேநாளில் உக்ரைனை கதறவிட்ட ரஷ்யா

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கட்டிடங்கள் தீக்கிரையாகி பலத்த சேதம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் பல கட்டிடங்கள் தீக்கிரையாகி அப்பகுதியே புகைமூட்டமாக

காட்சி அளிக்கிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ள நிலையில் கார்கிவ் நகரில் தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்