"மக்களிடம் எதற்கும் பணம் வாங்க மாட்டேன்" - அக் ஷயா, ஊராட்சித்தலைவர்
"திம்மரசநாயக்கனூர் ஊராட்சியை மேம்படுத்துவேன்";
தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சி தலைவராக வெற்றிபெற்ற 24 வயதே ஆன பொறியியல் பட்டதாரி இளம்பெண் அக் ஷயா, மக்களிடம் பணம் வாங்காமல் அரசு திட்டங்களை நிறைவேற்ற பாடுவேன் என தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.