உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம் அதிரடி

உள்ளாட்சி தேர்தலை 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-11 10:19 GMT
இடஒதுக்கீடு, மறுவரையறை உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றவில்லை என்பதால், உள்ளாட்சி தேர்தலுக்கு  தடை கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே  உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவை பிறப்பித்துள்ளது.9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்