கும்பகோணத்தில் விண்வெளி பற்றிய சிறப்பு கண்காட்சி-இஸ்ரோ இணை இயக்குனர் பங்கேற்பு
கும்பகோணத்தில் நடைபெற்ற விண்வெளி பற்றிய சிறப்பு கண்காட்சியில் இஸ்ரோ இணை இயக்குனர் பங்கேற்றார்
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் விண்வெளியை பற்றிய சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. அதில் இந்திய விண்வெளி கழகத்தின் உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் காட்சி படுத்தப் பட்டிருந்தது.
இஸ்ரோ இணை இயக்குனர் ரங்கநாதன் துணை இயக்குனர் செந்தில்குமார், மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.