பிரதமர் மோடி - சீன அதிபருக்கு வரவேற்பு : .அ.தி.மு.க. தலைமை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

மாமல்லபுரம் வருகை தரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

Update: 2019-10-02 23:24 GMT
பிரதமர் மோடியும் , சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11 ந் தேதி மாமல்லபுரம் வருகின்றனர். அவர்கள் 13- ந்தேதி வரை அங்கு தங்கி முக்கிய பேச்சுவார்த்தை  நடத்துகின்றனர். அவர்களுக்கு  அதிமுக சார்பில் சிறப்பான  வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், பாண்டியராஜன், விஜய பாஸ்கர், காமராஜ்,  முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து  ஆலோசிக்கபட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்