கள்ளக்காதல் விவகாரம் - கணவனை மனைவி கொலை செய்த வழக்கு : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் அதிரடி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனை ஏவி கொலை செய்த வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-09 02:04 GMT
சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் உதயபாலன். இவரது மனைவி உதயலேகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த உதயபாலனை கொலை செய்து விட்டு அவரது சொத்துகளை அபகரிக்க திட்டமிட்ட உதயலேகா, 2017 ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். அன்று இரவு உதயபாலன் வீட்டுக்கு சென்ற பிரபாகரன், அவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பிரபாகரன் மற்றும் உதயலேகா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்த நிலையில், விசாரணை காலத்தின் போதே பிரபாகரன் இறந்து விட்டார். உதயலேகா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், தீர்ப்பளித்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்