கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மரணம்

தமாகா துணைத் தலைவரும் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை வெற்றி பெற்றவருமான முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.

Update: 2019-06-28 11:19 GMT
தமாகா துணைத் தலைவரும் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை வெற்றி பெற்றவருமான முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார். சென்னைக்கு செல்லும் வழியில், திண்டிவனம் அருகே திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள காட்டுக்கடைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குமாரதாஸ் மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ குமாரதாசின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்