மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-07 11:05 GMT

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை..

இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு..

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு...

பி.ஆர்.எஸ். கட்சி மூத்த தலைவர் கவிதாவின், நீதிமன்ற காவல் மே 20ம் தேதி வரை நீட்டிப்பு..

கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. விளக்கம்...

சவுக்கு சங்கர் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறியிருந்த நிலையில் விளக்கமளித்தது சிறைத்துறை... 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்...

ஜெயக்குமாரின் வாய் மற்றும் தொண்டையில் இரும்புத் துகள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரிய வந்துள்ள நிலையில், கொலையா என்ற கோணத்தில் விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்