தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2019-06-20 07:15 GMT
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏறியும் இறங்கியும் வந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 211 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 40 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஆனி மாதத்தில் அடுத்தடுத்து முகூர்த்த சீசன் இருப்பதால் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்