இஸ்ரோவின் 3வது ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரம் - நில அளவீடு செய்யும் பணி துவக்கம்

திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த் துறையினர் துவக்கியுள்ளனர்.

Update: 2019-06-18 11:37 GMT
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது ஏவுதளத்தை அமைக்க திட்டமிட்ட இஸ்ரோ நிறுவனம், அதற்கு உகந்த இடமாக தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது. 

அதனை தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் குலசேகரப்பட்டினம், கூடல் நகர், அமராபுரம் பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது . இதற்காக திருச்செந்தூர்  வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியிலுள்ள நிலஅளவீடுகள் செய்யும் பணியினை துவக்கி உள்ளனர். மேலும் அப்பகுதியிலுள்ள  மரங்களை கணக்கெடுக்கும் பணியினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்