பணத்தை செலவழித்துவிட்டு பறக்கும் படையினர் மீது பழி - நாடகமாடிய தம்பி

பரமத்திவேலூரில் அண்ண‌னிடம் கொடுக்கவேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்து சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடிய தம்பி, போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார்.

Update: 2019-04-09 01:50 GMT
பரமத்திவேலூரில் அண்ண‌னிடம் கொடுக்கவேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்து சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடிய தம்பி, போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியை சேர்ந்த முத்துசாமி, அவரது அண்ணன் சேகரின் அரிசி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பக்கத்து ஊர்களுக்கு சென்று அரிசியை விநியோகம் செய்து பணத்தை பெற்றுவந்த முத்துசாமி, திடீரென 52 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிட்டதாக கூறியுள்ளார். முத்துசாமி மீது சந்தேகம் அடைந்த அண்ண‌ன் சேகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த‌தில், அங்கு பறக்கும் படையினர் யாரும் இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை மது அருந்தி செலவு செய்த‌தால், அண்ண‌னிடம் இருந்து தப்பிக்க இவ்வாறு நாடகம் ஆடியதை முத்துசாமி ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்