ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் வேலை

எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சென்னை மாங்காட்டைச் சேர்ந்த வேதவல்லி என்ற இளம்பெண்ணுக்கு தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-14 09:23 GMT
சென்னை மாங்காட்டை சேர்ந்த இளம்பெண் வேதவல்லியின் மகப்பேறு சோதனையின்போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டு, எச்ஐவி நோய் தாக்கியது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வேதவல்லிக்கு ஆதரவாக பல்வேறு  அமைப்புகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உதவி செய்வதாக உறுதி அளித்து இருந்தார். 

மேலும் முதலமைச்சர் தனி பிரிவு அலுவலகத்திலும் உதவி கேட்டு வேதவல்லி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வேதவல்லிக்கு தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சமூகநல ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்த வேதவல்லி, வேலைவாய்ப்பு வழங்கிய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்