`SRH Vs RCB' களத்தில் நின்றுசம்பவம் செய்த பெங்களூரு - 171 ரன்களில் வீழ்ந்த ஹைதராபாத்

Update: 2024-04-26 02:00 GMT

ஐபிஎல் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணியை, 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி, விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதாரின் அரைசதத்தால் 200 ரன்களைக் கடந்தது. மேலும் ஹைதராபாத்துக்கு 207 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. இதில் ஹைதராபாத் அணி வீரர்கள் ஜெய்தேவ் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர், 207 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத் அணியை, ஒரு ரன்னில் அவுட்டாகி டிராவிஸ் ஹெட் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதிலிருந்து மீள்வதற்குள் அபிஷேக் ஷர்மா 31 ரன்களிலும், எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசன் தலா 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், ஷபாஸ் அஹமத் 40 ரன்களிலும், ஜெயதேவ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவ்வாறாக ஹைதராபாத் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து இலக்கை எட்ட முடியாமல் பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றது.

Tags:    

மேலும் செய்திகள்