12 வயது டேபிள் டென்னிஸ் சாம்பியன் - உலக தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனை

ஜூனியர்ஸ் பயிற்சி சுற்றுக்கான சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் ஆப்பிரிக்க சிறுமி முதல் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

Update: 2020-11-09 03:07 GMT
ஜூனியர்ஸ் பயிற்சி சுற்றுக்கான சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் ஆப்பிரிக்க சிறுமி முதல் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். வடகிழக்கு ஆப்பரிக்க நாடான எகிப்தை சேர்ந்தவர் 12 வயது இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹானா கோடா. தனது அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இவர், உலக தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்த இடத்தை பிடித்திருக்கும் முதல் ஆப்பரிக்க சிறுமி என்ற அரிய சாதனையை ஹானா படைத்து உள்ளார். 


ஸ்பெயின் கிராண்ட் பிரி மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஸ்பெயின் வீரர்கள் அபார வெற்றி  


ஸ்பெயின் கிராண்ட் பிரி மோட்டார் சைக்கிள் பந்தய தொடரில் முன்னணி வீரர் ஜோன் மிர் வெற்றி பெற்றார். வெலன்சியா நகரில் நடந்து வரும் இப்போட்டியில், பிரதான சுற்று ஆட்டத்தில் ஜோன் மிர் முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றினார். அதேபோல் 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் மற்றொரு இளம் வீரரான் ரவுல் பெர்னான்டஸ் வெற்றி பெற்றார்.       



Tags:    

மேலும் செய்திகள்