CSK-க்கு வந்த புது சிக்கல் | CSK | Ruturaj Gaikwad | Rain | Hyderabad | Dhoni

Update: 2024-05-08 02:18 GMT

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்றும் மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஐதராபாத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை மழையால் போட்டி தடைபட்டு, ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டால், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படும். இந்நிலையில் ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் கனமழை கொட்டி தீர்த்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்