U19 Ind Vs Pak | பைனலில் இந்தியா Vs பாகிஸ்தான் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Update: 2025-12-20 02:38 GMT

இலங்கைக்கு எதிரான U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அதன் பின் களம் இறங்கிய இந்தியா, 18வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். மேலும், இந்தியாவின் அரோன் வர்கீஸ் 58 ரன்களும், விஹான் மல்ஹோத்ரா 61 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தனர். இதையடுத்து, வரும் டிசம்பர் 21 ஆம் தேதி, நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்