India Vs South Africa | பாண்டியாவின் ருத்ரதாண்டவம் - தென் ஆப்பிரிக்காவை சிதறவிட்ட இந்தியா
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்கள் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் குவின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 65 ரன்களை விளாசினார். இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் . இதனால் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.