3வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 371 ரன்களும், இங்கிலாந்து 286 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 349 ரன்களை எடுத்தது. 435 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், தனது முதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்துக்கு இன்னும் 228 ரன்கள் எஞ்சியுள்ளது.