`செம்ம குத்து' - நாமக்கல் தொகுதியில் தெறிக்கவிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்

Update: 2024-03-29 05:11 GMT

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தமிழ்மணி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்தி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது கோயில் திருவிழாவுக்காக மேளதாளத்துடன் தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களுடன், அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணி நடனமாடினார். பின்னர் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால், அவரை, அ.தி.மு.க எம்.எல்.ஏ. அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்