இன்றைய தலைப்பு செய்திகள் (28-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-28 04:10 GMT
  • ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்டு உக்ரைன் பயணம்..
  • உக்ரைனுடன் ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதி.. சுமார் 834 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உதவிகளும் அறிவிப்பு..
  • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தி, இஸ்ரேல் அரசுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டம்..
  • இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கண்டன முழக்கம்..
  • தென்காசி அருகே உணவகங்கள், மளிகை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..
  • ரசாயன பொருள் கலந்து தயாரிக்கப்பட்ட 323 கிலோ உணவுப்பொருள்கள், தரமற்ற சமையல் எண்ணெய் பறிமுதல்.
  • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆதாரமற்ற குற்றச்சாட்டில், தனது கணவரை கைது செய்து, சிறைபடுத்தி இருப்பதாக, கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு..
  • கிழக்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார், சுனிதா கெஜ்ரிவால்..
  • கொடைக்கானல் பூம்பாறை வனப்பகுதியில் 3வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ..
  • மலை கிராமங்கள் புகை மண்டலமாக மாறியுள்ள நிலையில், தீயை அணைக்கப் போராட்டம்..
Tags:    

மேலும் செய்திகள்