டெல்லியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும், கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2019-05-21 08:47 GMT
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும், கூட்டம் நடைபெறுகிறது. அதில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டணி தலைவர்களுக்கு விருந்தளிக்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி சென்றடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்