வெளுத்தெடுக்கும் அடமழை... பெருக்கெடுத்த சுருளி அருவி..! தீவிர கண்காணிப்பில் வனத்துறை

Update: 2024-05-25 10:45 GMT

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ள வனத்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்