சசிகலாவையே கொந்தளிக்க வைத்த அண்ணாமலை | Annamalai | Sasikala

Update: 2024-05-25 10:27 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் எனக் குறிப்பிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்ந்த சிறந்த தலைவர் ஜெயலலிதா எனக் குறிப்பிட்டுள்ளார். ஏழை எளியவர்களுக்கு அன்னையாகவும் அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா என்றும் அவருக்கு தெய்வ நம்பிக்கை உண்டு, ஆனால் மத நம்பிக்கை இல்லை எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

அனைவரையும் சமமாக மதித்த ஒப்பற்ற தலைவர் ஜெயலலிதாவை, எந்தவித குறுகிய வட்டத்திற்குள் யாராலும் அடைத்துவிட முடியாது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்