``ஓட்டு மெஷின் சந்தேகத்தால் வாக்குப்பதிவில் பாதிப்பு'' - தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி

Update: 2024-05-25 10:33 GMT

தலைநகர் டெல்லியில் உள்ள மொத்தி பாக் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் ராஜீவ் குமார் தனது வாக்கைப் பதிவு செய்தார். தான் முதன் முறையாக வாக்களிக்கச் சென்ற போது தனது தந்தையுடன் சென்றதாகவும், இன்று 95 வயதாகும் தனது தந்தையுடன் இணைந்து வாக்களித்தது பெருமை அளிப்பதாகவும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் நன்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேக சூழலை உருவாக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், ஒரு நாள் மக்களுக்கு இது குறித்து தாங்கள் விளக்குவதோடு மக்கள் எப்படி எல்லாம் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார். இது வாக்குப்பதிவு சதவீதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ராஜிவ் குமார் வருத்தம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்