Sathankulam case | மீண்டும் பரபரப்பை கிளப்பிய சாத்தான்குளம் வழக்கு.. விசாரணையில் திடீர் திருப்பம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - விசாரணையில் புதிய திருப்பம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதன் பேரில் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை திருத்தி எழுதியதாக சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி முத்துக்குமரன் குற்றம்சாட்டப்பட்ட 9 போலீசாரிடமும் நேரடியாக கேள்விகள் எழுப்பி விசாரித்து வருகிறார். விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதன் பேரில் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை திருத்தி எழுதியதாக சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் வழக்கில் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.