அதிகரிக்கும் ஒமிக்ரான்... 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-06 07:27 GMT
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து இரண்டாவது முறை எடுத்துரைத்துள்ளார் .

5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் அதிக கூடுவதை தவிர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது . கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு புதிய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் முடிந்த அளவு காணொளி பிரச்சாரங்களில் மேற்கொள்வது குறித்து அறிவித்தல் செய்யப்படும் என தகவல்.

தேர்தல் தேதி அறிவிப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்