கேரளாவில் கனமழை காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வு - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயதேவ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

Update: 2021-10-19 02:54 GMT
 கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக கக்கி அணை திறக்கப்பட்டுள்ளதால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குட்டநாடு, செங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்