3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

Update: 2024-05-08 01:59 GMT

சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழ​ங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இதன்படி, அதிகபட்சமாக அசாமில் 75.26 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 73.93 சதவீதமும், கோவாவில் 72.27 சதவீதமும், கர்நாடகாவில் 67.76 சதவீதமும், சத்தீஸ்கரில் 66.99 சதவீதமும், டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் 65.23 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 63.09 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.34 சதவீதமும், குஜராத்தில் 56.76 சதவீதமும், பீகாரில் 56.55 சதவீதம் மற்றும் மகாராஷ்டிராவில் 54.77 சதவீதமும்வாக்குகள் பதிவாகியுள்ளன. இறுதி வாக்குப்பதிவு நிலவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்