பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் கேட்ட கேள்வி | டாக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2025-12-17 12:34 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி மருத்துவமனையில் மூச்சுத்திணறலால் அனுமதிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவர் ஊக்கப்படுத்தி பாட வைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. அனகா என்ற மாற்றுத்திறனாளி பெண் நன்றாக பாடக்கூடியவர். இவர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனைக்கு வந்த நிலையில், தன்னால் இனி பாட முடியுமா என மருத்துவரிடம் கேட்டுள்ளார்.. அப்போது கண்டிப்பாக பாட முடியும் என ஊக்கப்படுத்திய மருத்துவர், அனகாவை பாட வைத்து தானும் சேர்ந்து பாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்