லிப்டில் சிறுமியை விரட்டி விரட்டி கடித்த வளர்ப்பு நாய்... உ.பியில் அதிர்ச்சி

Update: 2024-05-08 02:06 GMT

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில், லிப்டில் சென்ற சிறுமியை, கூட வந்த வளர்ப்பு நாய், விரட்டி விரட்டி கடித்தது. அங்குள்ள குடியிருப்பு ஒன்றில், சிறுமி ஒருவர் லிப்டில் சென்று கொண்டிருந்தார்.அதே லிப்டில் ஒரு வீட்டு நாயும் சென்றுள்ளது. சிறுமி லிப்டைத் திறந்து வெளியே செல்லும் போது, அந்த நாய் திடீரென்று கடிக்கத் தொடங்கியது. சிறுமி பயத்தில் அலற வெளியே இருந்த நபர் நாயை விரட்டி அடித்தார். பிறகு லிப்ட் தானாக மூடி பிறகு அந்த சிறுமி லிப்ட்டை திறந்தபோது, மறுபடியும் அந்த நாய் சிறுமியை விரட்ட தொடங்கியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்