மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு : பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் - ரயிலை மறித்து போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில், இடது சாரி கட்சியினர், பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-02-12 09:00 GMT
மேற்கு வங்க மாநிலத்தில், இடது சாரி கட்சியினர், பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், இடது சாரி கட்சியினர் நேற்று, சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற போது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு எ​திர்ப்பு தெரிவித்து இடது சாரி கட்சியினர், மேற்கு மாநிலத்தில், 12 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று காலை துவங்கிய முழு அடைப்பு போராட்டம் காரணமாக, இடது சாரி கட்சியினர் அசன்சோல், முர்ஷிதாபாத், ஷியாம்நகர், நார்த் பரகனா என, பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கான்ச்ரப்பரா ரயில் நிலையத்தில், ஒரு சிலர் ரயிலை மறித்து, மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இடது சாரி கட்சியினருடன் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
===
Tags:    

மேலும் செய்திகள்