சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு ?

சபரிமலை ஐய்யப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-11-23 05:20 GMT
கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் 1,000 பேரும், வாரக்கடைசியில் 2,000 பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான முன்பதிவு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி அன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 60 நாட்களுக்கான பதிவுகளும் நிறைவடைந்தன. ஆனால் கோயிலுக்கு குறைந்தளவு பக்தர்களே வந்ததால், இந்த முறை சீசன் களைகட்டவில்லை. இந்நிலையில் தினந்தோறும் 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்