கேரளாவில் மேலும் 1,420 பேருக்கு தொற்று உறுதி - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் நேற்று மேலும் ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-09 03:04 GMT
கேரளாவில் நேற்று மேலும் ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியளார்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது என்றும்,  இதுவரை 106 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக​​வும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 715 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையும் சேர்த்து, இதுவரை 20 ஆயிரத்து 866 பேர் குணமடைந்து உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 12 ஆயிரத்து 116 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்த பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் கொரோனாவால் நேற்று  485 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் கட்டுப்பாடுகள் தொடரும் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்