தீவிரவாதத்திற்காக தங்க கடத்தல் பணம்? - பரபரப்பு தகவல்கள்

அரபு நாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக, கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரமீஸ், சுங்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

Update: 2020-07-13 10:13 GMT
கேரளா தங்க கடத்தல் விவகாரத்தில், சிக்கியுள்ள ரமீஸ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கப் பெற்ற பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய பிரதிகளான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் கொரோனா இல்லை என உறுதியானது. நேற்று இருவரையும் ஆஜர்படுத்தியபோது, விசாரணைக்காக தங்கள் காவலில் ஒப்படைக்க கேட்டு என்ஐஏ மனு தாக்கல் செய்தது. ஆனால், கொரோனா பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் மனுவை பரிசீலிப்பதக நீதிபதி கூறியிருந்தார். தற்போது, கொரோனா முடிவு தெரிய வந்துள்ள நிலையில், இன்று அந்த மனு பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், 3 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவி பிறப்பித்த  நிலையில், இன்று என்ஐஏ காவலில் ஒப்படைப்பது தொடர்பான விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதால் இருவரும் கொரோனா பரிசோதனை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் என்ஐஏ காவலில் ஒப்படைக்கப்பட்டால் இக்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்கள், பணம் யார் யாருக்கு கைமாறியது, பின்னணியில் செயல்பட்ட உயர் அதிகாரிகள் என பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்