வசூல் போட்டியில் பேட்ட vs விஸ்வாசம்

போட்டி போட்டி வசூல் நிலவரத்தை அறிவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

Update: 2019-01-19 14:21 GMT
ஜனவரி 10ம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே வெளியாகின. தமிழகத்தை பொறுத்தவரை அஜித்தின் விஸ்வாசம் வசூலில் முந்துவதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து, பேட்ட படக்குழு தங்கள் படத்தின் 100 கோடி ரூபாய் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டனர் . ஆனால் அதே நாளில் விஸ்வாசம் படக்குழுவினர் தங்கள் படத்திற்கு 125 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளதாக அறிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே யார் சொல்வது உண்மை என ரசிகர்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்