இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா... எதிராக திரும்பும் மாபெரும் சக்தி

Update: 2024-04-27 09:56 GMT

அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் நடந்து வரும் காசாவில் இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டத்தில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர்...

பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் முகாம்கள் அமைத்து இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... ஏப்ரல் 18ல் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் இதுபோல் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையை வரவழைத்து போராட்டக்காரர்கள் அமைத்த கூடாரங்களை அகற்றிய நிலையில், ஆர்ப்பாட்டம் தீவிரமடையத் துவங்கியது. அன்றைய தினம் போலீசார் 100க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்... போராட்டத்திற்காக மாணவர்கள் அமைத்த கூடாரங்கள் அகற்றப்பட்ட பிறகும், போராட்டக்காரர்கள் திரும்பி வந்து மீண்டும் முகாம்கள் அமைத்தனர். இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன... தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழகம், பாஸ்டனின் எமர்சன் கல்லூரி என பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்