பிரேசில் அதிபருக்கு அறுவை சிகிச்சை அவசியம் இல்லை

குடல் அடைப்பு நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் அதிபருக்கு அறுவை சிகிச்சை அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-01-05 11:39 GMT
குடல் அடைப்பு நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் அதிபருக்கு அறுவை சிகிச்சை அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ல் போல்சனரோவை ஒருவர் கத்தியால் குத்தியதால், அவருக்கு 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார்  மருத்துவமனையில் குடல் அடைப்பு நோயின் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திரவ உணவுகளை மட்டும் பொல்சனரோ எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்