வரலாற்றில் முதல்முறையாக அறிமுகம் செய்த ஆப்பிள்.. புதிய ஐபேட் ஏர்

Update: 2024-05-08 10:44 GMT

வரலாற்றில் முதல்முறையாக அறிமுகம் செய்த ஆப்பிள்.. புதிய ஐபேட் ஏர்

ஆப்பிள் நிறுவனம் தனது லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக ஐபேட் ஏர் மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள iPad களில் செயற்கை நுண்ணறிவு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐபேட்கள், நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவரும் என ஆப்பிள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில், கூடுதல் சிறப்பம்சங்களை மேற்கொள்ளும் வகையில் ஐபேட்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்