ஹூவாய் முதன்மை நிதி தலைவர் விடுதலை - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஆயிரம் நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரிக்கு சீன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2021-09-26 10:59 GMT
ஆயிரம் நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரிக்கு சீன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாயின் முதன்மை  நிதி அதிகாரியான மென் வான்சூ 2018ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார தடைகளை மீறியதாக கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக தனது நாட்டில் இருந்த கனடாவை சேர்ந்த இருவரை உளவுப்பார்த்ததாக கூறி சீனா கைது செய்தது. இதனால் சீனா, கனடா இடையே பனிப்போர் மூண்டது. ஆயிரம் நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையாகி சீனா வந்த மென் வான்சூவிற்கு, ஷென்ஜென் சர்வதேச விமான நிலயத்தில் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்