ஆப்கன் - தாலிபன் நீடிக்கும் பிரச்சினை; போருக்கு தயார் - ஆப்கன் அதிபர் பகிரங்க அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அரசாங்கம், தாலிபன் பயங்கரவாதிகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பகிரங்கமாக அறிவித்து உள்ளார்

Update: 2021-05-18 07:59 GMT
ஆப்கானிஸ்தான் அரசாங்கம், தாலிபன் பயங்கரவாதிகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பகிரங்கமாக அறிவித்து உள்ளார். ஆப்கன் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், தாலிபன்கள் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால், போர் ஒன்றே தீர்வாகும் என்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்