"தமிழ் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்" - வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தமிழ் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-11-07 03:32 GMT
இலங்கையில் தமிழ்  கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் மீண்டும்  வலியுறுத்தியுள்ளார். தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிள்ளதை தாம் வரவேற்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  இத்தனை  வருடங்களாக சிறையில் வாழ்க்கையை கழித்த தமிழ் இளைஞர்களுக்கு  அரசாங்கம் நிச்சயம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், சிறைக்கைதிகளின் விடுதலையை அரசியலாக்கியதால்தான் 
இதுவரை எந்தவொரு நன்மையும் பெற்றுத்தர முடியவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்