"தாம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவுடனான உறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை" - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன்

தாம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-03 09:10 GMT
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இது தொடர்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் கடுமையான உழைப்பால் தான், அமெரிக்கா கட்டமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் சில இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியாவுடனான உறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்