கொரோனா - பல லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிப்பு - சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

கொரோனா தாக்கத்தால் , நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உலகளவில் 13 கோடி வேலை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.

Update: 2020-05-28 03:36 GMT
கொரோனா தாக்கத்தால் , நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உலகளவில் 13 கோடி வேலை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.  இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் GUY RYDER கூறுகையில் கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் அதிகம் பேர் வேலைகளை இழந்து உள்ளதாகவும், 6 இளைஞர்களில் ஒருவரின் வேலை பறிபோய் விட்டதாகவும் கூறியுள்ளார். ஊரடங்கால் இளைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக GUY RYDER தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்