உலக அளவில் இளவயது பிரதமராக தேர்வான சன்னா மரின்...

உலக அளவில் இளவயது பிரதமர் என்கிற பெருமையை பின்லாந்தின் சன்னா மரின் பெற்றுள்ளார்.

Update: 2019-12-09 09:50 GMT
உலக அளவில் இளவயது பிரதமர் என்கிற பெருமையை பின்லாந்தின் சன்னா மரின் பெற்றுள்ளார். அங்கு நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் 34 வயதான சன்னா மெரின் வெற்றி பெற்று, அடுத்த வாரத்தில் பதவி ஏற்க உள்ளார். இதற்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அவர், தற்போது  ஐந்து கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பொறுப்புக்கு வந்துள்ளார். அங்கு நடைபெற்ற அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தை கையாள முடியாத நிலையில், பிரதமர் ஆன்டி ரைய்னி  (Antti Rinne) பதவி விலகியதை அடுத்து சன்னா பொறுப்புக்கு வர உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்