கொழும்புக்குள் நுழைந்த வெடிப் பொருட்கள் அடங்கிய வாகனம் -அனைத்து காவல் நிலையங்களும் முழு உஷார் நிலை

இலங்கை தலைநகர் கொழும்புவுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும், வெடிப் பொருட்கள் அடங்கிய வேன் மற்றும் சரக்கு வாகனம் தொடர்பான தகவல்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-04-24 06:29 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும்,  வெடிப் பொருட்கள் அடங்கிய வேன்  மற்றும் சரக்கு வாகனம் தொடர்பான  தகவல்கள் அனைத்து  காவல் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர்  ருவண் குணசேகர, பல இடங்களில் சந்தேகத்துக்கு இடமான பார்சல்கள் மற்றும் வாகனங்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். 

கொழும்பு கிருலப்பனை - கொலம்பகே மாவத்தையில் சந்தேகத்துக்கிடமான வகையில் பெட்டி ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அங்கு வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, கிங்ஸ்பெரி விருந்தகத்திற்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் தொடர்பாக, அதன் உரிமையாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

கொழும்பு ரத்மலான நான்காம் ஒழுங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய 13 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 21 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த உணவகத்தில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர் என்று ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நவம் மாவத்தையில் உள்ள தனியார் வங்கி அருகே கிடந்த சந்தேகத்துக்கு இடமான பார்சல் குறித்தும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்