கடலுக்குள் 3 முதல் 5 அடி ஆழத்தில் மீன்களுடன் விளையாடும் சாகச விளையாட்டு...

SEA WALKER..!! சுற்றுலாப் பயணிகளை கவர உலகம் முழுவதும் உள்ள பிரபலமான சாகச விளையாட்டு..

Update: 2018-11-22 05:40 GMT
கடலுக்குள் 3 முதல் 5 அடி ஆழத்தில், நீங்கள் நடந்து சென்று மீன்களுடன் விளையாடலாம்..இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் இந்த சாகசம் மிகவும் பிரபலம்..கடலுக்கு அடியில் சுவாசிக்க பிரத்யேக ஹெல்மட், நம்மை பாதுகாக்க நீண்ட CABLE ROPE ஆகியவை தான் SEA WALKING க்கு தேவைப்படும் முக்கிய கருவிகள்..கடலுக்கு அடியில் நடந்து செல்லும் போது, அங்குள்ள மீன்களுக்கு நீங்கள் உணவும் வழங்கலாம்.. மீனுக்கு நாம் உணவாகி விடுவோமோ என்ற பயம் நிச்சயம் வரும்..அதற்கு தான், பாதுகாக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து முறையான கண்காணிப்புக்கு பிறகே, SEA WALKING க்கு அனுமதிக்கப்படுவார்கள். மறக்க முடியாத அனுபவத்தை நீங்கள் விசேஷ கேமிராக்கள் மூலம் பதிவும் செய்து கொள்ளலாம். முதன் முதலாக கப்பல்கள் கட்ட தான், இந்த தொழில்நுட்பம் , பிறகு தான் சாகசத்திற்கும், சுற்றுலாப் பயணிகளை கவர பயன்படுத்தப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்